உலக செய்திகள்

13-ந்தேதி வருகிறார் இந்தியாவில் பிறந்தநாள் கொண்டாடும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், 13-ந்தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்தியாவில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். நவம்பர் 13 மற்றும் 14-ந்தேதிகளில் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இந்திய-இங்கிலாந்து உறவை கொண்டாடுவதற்காக அவர் வருவதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின்போது, பருவநிலை மாற்றம், நிலைத்த சந்தை, நிலைத்த பொருளாதாரம் ஆகிய விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறியுள்ளது.

நவம்பர் 14-ந்தேதி, இளவரசர் சார்லசுக்கு 71-வது பிறந்தநாள் ஆகும். அதை இந்தியாவிலேயே கொண்டாடுகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, சார்லசுடன் அவருடைய மனைவி இளவரசி கமீலா வரவில்லை. சார்லஸ், நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அவருடன் கமீலா இணைந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் சார்லஸ், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருவது இது 2-வது தடவை ஆகும். மொத்தத்தில், அவர் இந்தியாவுக்கு 10-வது தடவையாக வருகிறார்.

சமீபத்தில், சார்லசின் மூத்த மகன் இளவரசர் வில்லியம், தன் மனைவியுடன் பாகிஸ்தானுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்