பெர்ன்/புதுடெல்லி
இந்தியா உட்பட 40 நாடுகளுடன் இது தொடர்பான ஒப்பந்தத்தை ஸ்விஸ் ஏற்றுக்கொண்டாலும் கொடுக்கப்படும் தகவல்கள் பத்திரமாகவும், ரகசியமாகவும் வைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதன்படி 2019 ஆம் ஆண்டிலிருந்து தானகவே பணப்பரிமாற்றம், பதுக்கல் தொடர்பான தகவல்களை இந்திய அரசிற்கு ஸ்விஸ் வங்கிகள் வழங்கும். இந்தியாவிலிருந்து வெளியேறும் கணக்கில் காட்டப்படாத பணம் ஆயிரம் கோடிகளில் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்படுவதாக பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. என்றாலும் அவ்வங்கிகள் தங்கள் ரகசிய விதிகளால் வாடிக்கையாளர் தகவல்களை வெளியிடுவதில்லை.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களினால் தாங்கள் தரும் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதில் ஸ்விஸ் திருப்தியுற்றுதாக தெரிகிறது.
ஏற்கனவே இந்தியாவும், ஸ்விட்சர்லாந்தும் 2015 ஆம் ஆண்டில் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ரூ 4000 கோடி அளவிலான கறுப்புப்பணம் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன.