உலக செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 4 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சத்தார் பகுதியில் கலாபாரி என்னும் பிரபல மார்க்கெட் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 12 கடைகள் சேதம் அடைந்தன.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியை முற்றுகையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் சக்தி வாய்ந்த குண்டு என்பதும் அது முன்கூட்டியே வெடித்ததும் தெரியவந்தது.

மார்கெட் திறக்கப்படுவதற்கு முன்பாகவே குண்டு வெடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து