உலக செய்திகள்

சீனா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறும்; சூரியனில் புதிய கண்டுபிடிப்பு பெண் பாபா கணிப்பு 2018 ஆம் ஆண்டு பலிக்குமா?

2018ம் ஆண்டில் சீனா உலகளவில் பலம் வாய்ந்த நாடாக மாறும் என்றும், வீனஸ் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு நிகழும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.

தினத்தந்தி

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கபடுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது.

2017-ம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் பகைமை அதிகரித்து வருவதால் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா? என்ற அச்சமும் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் Parker Solar Probe என்ற விண்கலத்தை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலம் வீனஸ் கிரகத்தில் தரையிறக்கப்படவில்லை என்றாலும், இதன் முக்கிய குறிக்கோள் சூரியனை சுற்றியுள்ள காந்த புலத்தின் வடிவம் மற்றும் சூரியப் புயலுக்கான மூலத்தை கண்டுபிடிப்பதாகும்.

மேலும் சூரியனை சுற்றியுள்ள பிளாஸ்மாவுக்கு எங்கிருந்து ஆற்றல் வருகிறது என்பதையும் கண்டறியும்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே Conference Board- 2018ம் ஆண்டில் அமெரிக்காவை விட சீனா பலம் வாய்ந்ததாக மாறும் என தெரிவித்தது. இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் பாபா வாங்காவின் கணிப்பு நிச்சயம் பலிக்கும் என்றே நம்பப்படுகிறது.

பாபா வாங்காவின் மற்ற கணிப்புகள்

* 2016 ஆண்டு மிகபெரிய இஸ்லாமிய போர் தெடங்கும் ஐரோப்பியர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர்.அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள். எனவும் கூறி உள்ளார்

* 2018 ஆம் ஆண்டு சீனா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறும் என கூறி உள்ளார். அவர் கூறியபடி சமீப வருடங்களாக பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் சீனா வல்லமை பெற்று வருகிறது.

* பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும் என கூறி உள்ளார் அது 2023 க்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.

* 2025: ஐரோப்பியாவின் மக்கள் தொகை 0 வாக அமையும்

* 2028 மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான் அங்கு புதிய எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவார்கள்.

* 2033 உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்

* 2043 ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும்.

* 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்

* 2170 முதல் 2256 ஆம் ஆண்டுக்கு இடையில் பூமியில் இருந்து சுதந்திரமாக பிரிந்து அணுசக்தியால் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்கப்படும், உலகில் கடலுக்கு அடியில் நகரங்கள் உருவாகும் வேற்று கிரகவாசிகளின் கண்டு பிடிப்புகள் அதிபயங்கரமான கண்டு பிடிப்பு நடக்கும்

* 2262 ஆம் ஆண்டு மற்றும் 2304 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நமது கால பயணத்தில் விரிசல் ஏற்படும். பிரஞ்சு கொரில்லாக்கள் பிரான்சில் முஸ்லீம் அதிகாரிகளுடன் பேரிடுவார்கள்.

* 2341 இல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும் பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும். மனிதர்கள் நமது சூரியகுடும்பத்தின் மற்ற கிரகங்களை தேடி ஓடுவர்.

* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள் நடக்கும் மனிதர்களுக்கு இறப்பே கிடையாது,வேற்றுகிரகவாசிகள் உள்வாங்கபடுவர். 34 ஆயிரம் கோடி மக்கள் கடவுளிடம் பேச சிதறி ஓடுவார்கள்

* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்