உலக செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவு அருகே சுற்றி திரிந்த படகு; தடுத்து நிறுத்தி இந்திய கடலோர காவல் படை விசாரணை

அந்தமான் நிகோபார் தீவு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த படகை இந்திய கடலோர காவல் படை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறது.

தினத்தந்தி

போர்ட்பிளேர்,

அந்தமான் நிகோபார் தீவுகள் அமைந்த பகுதியருகே இந்திய கடலோர காவல் படை ரோந்து பணியில் இன்று ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில், சந்தேகத்திற்குரிய வகையில் படகு ஒன்று அந்த வழியே சென்றுள்ளது.

இதனை முதலில் ஹெலிகாப்டரில் சென்ற ரோந்து படையினர் கண்டறிந்து உள்ளனர். இதனையடுத்து, இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து கப்பல், அந்த படகை தடுத்து நிறுத்தியது. அந்த படகில் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.

இதன்பின்னர் அவர்கள் அனைவரையும் போர்ட்பிளேர் நகருக்கு கொண்டு சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடல் பகுதி வழியே ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ கூடும் என கூறப்படுகிறது. அந்தமான் கடல் பகுதியில் போதை பொருள் கடத்தல் படகும் பிடிபட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது