உலக செய்திகள்

கப்பல்கள் மோதலில் மாயமான அமெரிக்க கடற்படை வீரர்கள் 7 பேரும் பலி

கப்பல்கள் மோதலில் மாயமான அமெரிக்க கடற்படை வீரர்கள் 7 பேரும் பலியாகினர்.

தினத்தந்தி

டோக்கியா

ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 கடல் மைல் தொலைவில் வந்த போது எதிரே பிலிப்பைன்ஸ் கொடியுடன் ஏசிஎஸ் கிரில்டல் என்ற சரக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கப்பலில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது.

கப்பல்கள் மோதிய விபத்தில் அமெரிக்க போர்க் கப்பலில் இருந்த 7 வீரர்கள் மாயமாகிவிட்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு வீரர்களின் உடல்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கடற்படை வீரர்களின் உடல்கள் கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, வீரர்கள் யார் என கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு