உலக செய்திகள்

மாலத்தீவில் தீ விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு

மாலத்தீவில் தீ விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

மாலே,

மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 10-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் இருந்த வாகன பழுதுபார்க்கும் கடையில் பிடித்த தீ மேல்தளத்திலும் பரவி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இதில் மேல்தளத்தில் தங்கியிருந்த இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். 8 இந்தியர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான இந்தியர்களில் 3 பேர் தமிழர்கள் ஆவர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீ விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தீவிரப்படுத்தியது. இதன் பயனாக நேற்று 8 உடல்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், 'மாலத்தீவில் நடந்த துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் பலியான 8 இந்தியர்களின் உடல்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதற்கு உதவிய மாலத்தீவு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்' என கூறப்பட்டு இருந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து