கம்சட்கா,
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் குரில் ஏரி அமைந்துள்ளது. இதில், மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகி விழுந்துள்ளது. அதில், 3 விமானிகள் மற்றும் 13 பயணிகள் என 16 பேர் இருந்தனர்.
அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். மீட்பு பணியில் 8 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 4 பேர் உடல்நலமுடன் உள்ளனர். விபத்து நடந்த ஏரியில் ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதியில் நிறைய சுற்றுலாவாசிகளின் உடல்களும் கிடக்கின்றன. அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன என அந்நாட்டு அவசரகால அமைச்சகம் தெரிவித்து உள்ளது.