உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், 100 ஆண்டுகள் ஆன நிலையில் அடக்கம்

இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், 100 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அடக்கம் செய்யப்பட்டது.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் சுந்தர்லேண்ட் நகரில் பிறந்தவர் மேமி ஸ்டூவர்ட். இவர் நடன மங்கையாக இருந்து வந்தார். 1918-ம் ஆண்டு ஜார்ஜ் ஷாட்டன் என்ற கப்பல் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். 26 வயதான நிலையில் 1919-ம் ஆண்டு இவர் காணாமல் போனார். அடுத்த சில தினங்களில் அவர் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரிய வந்தது. 1961-ம் ஆண்டுதான் அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி போடப்பட்ட நிலையில் ஒரு ஈய சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்னர் அது என்ன ஆனது என தெரியாமல் போய் விட்டது. இந்த நிலையில், அவரது உடல், கார்டிப் தடய அறிவியல் ஆய்வகத்தில் ஒரு அலமாரியில் சுமார் 60 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை, இப்போது அவரது மூத்த மருமகள் சுசீ ஓல்டுநல் கண்டுபிடித்தார். அவரது முயற்சியினால் மேமியின் உடல் மீட்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் சுந்தர்லேண்டில் மேமியின் உடல், முறைப்படி அவரது பெற்றோர் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்