உலக செய்திகள்

எத்தியோப்பியாவிலிருந்து நைரோபி சென்ற போயிங் 737 விமானம் விழுந்து விபத்து

எத்தியோப்பியாவிலிருந்து நைரோபி சென்ற போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டது.

தினத்தந்தி

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. விமானம் கீழே விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்துள்ளது. விமானத்தில் பயணிகள் 146 பேர் இருந்து உள்ளனர். விமானிகள் பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர். விபத்தினால் உயிரிழப்பு நேரிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு