உலக செய்திகள்

போகோ ஹராம் எழுச்சியால் 300 பேருக்கு மேல் மரணம் - சர்வதேச மன்னிப்பு சபை

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோ ஹராம் சுமார் 380 பேர்களை கொன்றுள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

அபுஜா

நைஜீரியா மட்டுமல்லாது காமரூனிலும் இக்கொலைகள் நடந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. நைஜீரிய ராணுவமோ போகோ ஹராம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறி வருகிறது. என்றாலும் தொடர்ச்சியாக பல தாக்குதல்களை அந்த இயக்கம் நடத்தியுள்ளது.

ஜூலையில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் மூவரை கடத்தியது 40 பேர்களை கொன்றது. ஏப்ரல் முதல் தற்கொலை படையினர் மூலம் 81 பேர் நைஜீரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் காமரூனில் 158 பேர்களை அந்த இயக்கம் கொன்றுள்ளது.

சுமார் ஒரு கோடி பேர் நைஜீரியா, காமரூன், நைஜர் மற்ரும் சாட் ஆகிய நாடுகளில் போகோ ஹராம் இயக்கத்தினால் உணவு கிடைக்காமல் அவதியுற்று வருவதாக ஐநா கூறுகிறது. கடந்த 8 வருடங்களில் சுமார் 20,000 பேர் உள்நாட்டு மோதலில் இறந்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு