உலக செய்திகள்

பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு: ஒருவர் பலி, 10 போலீசார் படுகாயம்

பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் பலியாகினார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பாரா தாலுகா அலுவலக வளாகத்தில் போலீஸ் நிலையம் செயல்படுகிறது. இந்த போலீஸ் நிலையம் மீது அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த போலீஸ் நிலையம் மற்றும் அருகில் இருந்த சில கட்டிடங்கள் சேதமடைந்தன.

இந்த தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் 10 போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?