பாரீஸ்,
தேங்காயில் பாம் வச்சுட்டாங்க என்று ஒரு படத்தில் கவுண்டமணி பேசுவார். அதுவரை அறியப்படாத விஷயம் என்பதால் அந்த டயலாக் ரொம்பவே பாப்புலர் ஆனது. அதேபோல இப்போது யாரும் இதுவரை கேள்விப்படாத வகையில் மிக விநோதமான முறை ஒன்று பிரான்ஸ் நாட்டில் அரங்கேறி உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஆசனவாயில் வெடிகுண்டு ஒன்றுடன் மருத்துவமனைக்கு நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 31-ம் தேதி இரவு, அந்நாட்டின் டூலோன் நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு வந்த 24 வயது இளைஞர் ஒருவர் கூறிய வார்த்தையால் சில நொடிகளில் மருத்துவமனையே பரபரப்பானது.
தனது ஆசனவாயில் ஒரு பொருளை நுழைத்ததாகவும், அதை திரும்ப எடுக்க முடியவில்லை எனவும் அவர் கூற, அது என்ன பொருள் என பரிசோதித்த டாக்டர்கள் ஒரு நிமிடமே அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பதறிப்போன டாக்டர்கள் அருகில் உள்ள போலீசாருக்கு தகவலளிக்க, சிறிது நேரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள்.
பிரச்சினை என்னவென்றால், அந்த நபர் அந்த வெடிகுண்டை எளிதாக ஆசனவாயில் நுழைத்துவிட்டார். ஆனால், அதை எளிதாக வெளியே எடுக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த நபரின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்துதான் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக அகற்றினர்.
ஆசன வாய்க்குள் முதல் உலக போரின்போது பயன்படுத்தபட்ட 8 அங்குல நீளம் கொண்ட பீரங்கி குண்டு இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், அவர் எதற்காக அந்த வெடிகுண்டை தனது ஆசனவாய்க்குள் நுழைத்தார் என்பதை கடைசிவரை அவர் கூறவேயில்லையாம் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலைபடையை சேர்ந்தவரா? அல்லது பயங்கரவாதிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.