உலக செய்திகள்

பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்; 4 வீரர்கள் பலி

பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

குவெட்டா,

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ஹர்னாய் மாவட்டத்தில் கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அந்த வாகனம் சபர் பாஷ் பகுதியருகே வந்தபோது, சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.

இதில், 4 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 2 அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அதிகாரிகளை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...