கோத்தன்பர்க்,
சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர். 3 பேர் வரை பலத்த காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்பினை தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது. இதனை தொடர்ந்து 100 முதல் 200 பேர் வரை அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.