உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்- போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்று இங்கிலாந்து பிரதமர் கூறினார்.

பிரான்சில் ஜி7 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பியாரிட்ஸ் வந்திருந்தார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக போரிஸ் ஜான்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் நாடு எடுத்துள்ள ஜனநாயக முடிவு குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், நாங்கள் உலக நாடுகளிலிருந்து விலகி நிற்போம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். சிலர், பிரிட்டனின் சிறந்த நாட்கள் கடந்து சென்று விட்டதாகவும் நினைக்கிறார்கள்.

அந்த நபர்களிடம் நான் சொல்கிறேன், நீங்கள் மிகவும் தவறாக நினைக்கிறீர்கள். பிரெக்சிட்டிற்குப் பிறகு உலக அரங்கில் இங்கிலாந்து ஒரு ஆற்றல்மிக்க பங்காளியாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும் சர்வதேச சமூகத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்று கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்