உலக செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு பிரேசில் ஒப்புதல்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்து பயன்பாடுத்தி கொள்ள பிரேசில் நாடு ஒப்புதல் அளித்து உள்ளது.

மாஸ்கோ,

பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.68 கோடியாக உள்ளது. பலி எண்ணிக்கையும் 4.70 லட்சம் என்ற அளவில் உள்ளது. உலக நாடுகள் வரிசையில் கொரோனா பாதிப்புகளால் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகளையும், தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்து 3வது இடத்திலும் பிரேசில் உள்ளது.

இதனை தொடர்ந்து அந்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. இதுவரை 7 கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. 2.27 கோடி பேர் இரண்டு டோஸ்களையும் போட்டு கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள பிரேசில் நாடு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால், உலகளவில் இந்த தடுப்பூசியை தேர்வு செய்த நாடுகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்து உள்ளது. இதனை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியகம் தெரிவித்து உள்ளது.

இதன்படி, பிரேசிலின் பல்வேறு பகுதிகளிலும், இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்து, பயன்படுத்துவதற்கு உரிமம் அளிக்கவும் முடிவாகி உள்ளது. ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது 91.6 சதவீதம் அதிக திறன் வாய்ந்தது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை