உலக செய்திகள்

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இன்று முதல் ஏற்கிறது பிரேசில்

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை வகித்த இந்தியாவின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

தினத்தந்தி

ரியோ டி ஜெனிரோ,

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவரான இந்தியா, 'வாசுதெய்வ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாட்டை நடத்தியது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜி-20 மாநாடு சிறப்பாக நடைபெற்ற பின்னர், அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான தலைவர் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வாவிடம் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

இந்த நிலையில், அதிகாரம் மிக்க இந்த அமைப்பின் தலைவர் பதவியை இன்று (டிசம்பர் 1-ந்தேதி) முதல் பிரேசில் நாடு முறைப்படி அலங்கரிக்கிறது. அத்துடன் அடுத்த உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது