உலக செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசி இறக்குமதிக்கு பிரேசில் அரசு அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

பிரசிலியா

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இந்த அனுமதியை பிரேசில் அரசு அளித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் சில நிர்ணயங்களை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி கோவேக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் சுகாதார கண்காணிப்பு மையம் அனுமதி மறுத்து இருந்தது நினைவிருக்கலாம்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதிக்கும் பிரேசில் அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல்கட்டமாக 40 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்