பிரேசிலா,
கொரோனா வைரஸ் தொற்று மிகவும் சாதாரண ஒன்றே எனவும் அதற்கு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை எனக் கூறி வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், 'நான் நலமுடன் இருக்கிறேன். காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும். வீட்டில் தனித்திருக்க முடியவில்லை' எனக்கூறிய போல்சனோரா, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது. இன்னும் சில தினங்களில் நான் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வேன் என்றும் போல்சனோரா தெரிவித்தார்.