உலக செய்திகள்

பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

பிரேசிலில் உருமாறிய கொரோனா பரவி வருவதால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

பிரேசிலியா,

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு பிரேசில். பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கையில் 2ஆம் இடம் வகிக்கிறது. அந்த அளவுக்கு பிரேசிலில் கொரோனா உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நிலையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 790- பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 37,498- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 1 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரத்து 756- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் இதுவரை 6.26 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 கோடி பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?