உலக செய்திகள்

சீனா கொரோனா தடுப்பூசி சோதனை: கடுமையான பக்க விளைவு சோதனை நிறுத்தம்

பிரேசிலில் நடைபெற்று வந்த சீனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தினால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

ஸா பாலே

சீனாவின் சினோவாக் ஆய்வகத்தின கொரோனா தடுப்பூசி சோதனைகள் பிரேசிலில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், மோசமான சம்பவத்தை அடுத்து பிரேசில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் சினோவாக் ஆய்வகத்தின் சோதனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

அக்டோபர் 29 ம் தேதி சோதனைகளில் பங்கேற்றவர்களில் ஒருவருக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் பக்க விளைவுகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

மரணம் அல்லது அபாயகரமான விளைவுகள், இயலாமை, மருத்துவமனையில் சேருதல், மருத்துவ சாதனம் மூலம் தொற்று பரவுதல் அல்லது மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க நிகழ்வு போன்ற விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.