லண்டன்,
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 25ம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு 38க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால், தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல நாட்டு அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,867 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,60,981 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 93 லட்சத்து 78 ஆயிரத்து 165 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 11,36,681 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.