கோப்புப்படம் 
உலக செய்திகள்

இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் 88,376 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 88,376 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,97,851 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 96 லட்சத்து 58 ஆயிரத்து 375 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 12,92,539 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, ஒமைக்ரான் மாறுபாடின் அதிவேக பரவலால், நாட்டிற்கு கடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார். வரவிருக்கும் நாட்களில் மக்கள் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதால், சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை