கோப்புப்படம் 
உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிதாக 36,804 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் 691 பேர் பலி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 7.80 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் தகவமைத்துக்கொண்ட புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அங்கு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 21,10,314 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் அதிக அளவாக மேலும் 691 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 307 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அங்கிருந்து வரும் விமானங்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவிலும் வரும் 31 ஆம் தேதி வரை இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு