அமெரிக்காவில் வாழும் உலகப்புகழ் பெற்ற பாப் இசை பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீபத்தில்தான் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். அவரது இசை வாழ்க்கை ஸ்தம்பித்து போய் விட்டது. இந்த நிலையில் அவர் திடீரென ஒரு ஹாலிவுட் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
இது பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நான் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்குவது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். எனது இந்தப் படம் குவென்டின் டரான்டினோவின் தற்காப்புக்கலை திரைப்படமான கில்பில் படத்தைப்போல இருக்கும்.
படப்பிடிப்பின்போது உள்ள சவால் எனக்கு தெரியும், என் வாழ்வின் பாதியில் நான் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்காக இருந்ததாக உணர்கிறேன். அதனால்தான் இப்போது என்னைஇயக்க நான் தேர்வு செய்தேன். நான் எனக்கு மேக் அப் போடுவேன். நானே ஆடை அணிவேன். நானே இசை அமைப்பேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அந்தப்படத்தின் அருகே அவர் ஒரு நிமிட நேரம் ஓடக்கூடிய அவரது பிரேவ் நியூ கேர்ள் என்ற பாடலுடன் 2 வித்தியாசமான ஆடைகளில் நடனமாடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இரண்டு மணி நேரத்தில் அந்த வீடியோவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.