உலக செய்திகள்

அமெரிக்காவில் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 24ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதனை தொடர்ந்து மியாமி பகுதியில் குடியிருந்த பல்வேறு குடியிருப்புகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறினர். இந்த சம்பவத்தில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், மாயமானவாகளின் குடும்பத்தினரிடம் மியாமி-டேட் நகர மேயா டேனியலா லெவைன் காவா கூறும்போது, அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதனை தொடாந்து, விபத்தில் 79 பேர் உயிரிழந்தது அதிகாரபூவமாக உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் வேதனை அளிக்க கூடியது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்பதற்கான பணிகளை அவசரமாக மேற்கொள்ள மீட்பு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

கட்டிடம் இடிந்து விழுந்து 18 நாட்கள் கடந்த நிலையில், விபத்தில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது.

கட்டிட இடிபாடுகளில் புதையுண்டவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கும் கூடுதலான நிலையில், உயிருடன் இருக்க கூடியவர்களை கண்டறிவது என்பது சாத்தியமில்லை என்று மீட்பு குழுவினர் கூறியுள்ளனர். விபத்துக்கு பிறகு இன்னும் 31 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்