உலக செய்திகள்

அடையாளத்தினை மறைக்க தலையை உள்ளாடையால் சுற்றி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன்

கொள்ளையன் தனது அடையாளத்தினை மறைக்க உள்ளாடையால் தலையை மூடி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் அலுவலக கட்டிடம் ஒன்றில் கொள்ளையன் ஒருவன் வித்தியாச முறையில் கொள்ளை அடிக்க சென்றுள்ளான்.

இதுபற்றிய சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான வீடியோவை அந்நாட்டு காவல் துறை முகநூலில் வெளியிட்டு உள்ளது.

போலீசாருக்கு அடையாளம் தெரிந்து விட கூடாது என்பதற்காக நீல நிற உள்ளாடையை தலையை சுற்றி மூடி கட்டிடத்தின் ஜன்னலை திறந்து கொண்டு கொள்ளையன் ஒருவன் உள்ளே செல்கிறான். உள்ளே நுழைந்தவுடன் கேமிராவை காண்பதும் பதிவாகி இருக்கிறது. பின்பு கீழே குனிந்து எதனையோ எடுத்து விட்டு செல்வதுபோன்ற காட்சிகள் அதில் வெளியாகி உள்ளன.

இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் மேல் பார்க்கப்பட்டு உள்ளது. இதனை கண்ட பலருக்கும் சிரிப்பினை ஏற்படுத்தி உள்ளது. சிலர் இதற்கு கமெண்டும் அளித்துள்ளனர். அவர்களில் ஒருவர் இது கேப்டன் பிராண்ட் உள்ளாடை என தெரிவித்து உள்ளார்.

கொள்ளையடிக்க போகும் கொள்ளையர்கள் வித்தியாச முறையில் தங்களை தயார் செய்து கொண்டு செல்வது இது முதல்முறை அல்ல. சமீபத்தில், கன்னியாகுமரியில் கொள்ளையன் ஒருவன் பிளாஸ்டிக் பை ஒன்றை தலையை சுற்றி மூடி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளான். பின்னர் கொள்ளையன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்