அங்காரா,
துருக்கி நாட்டின் மனிசா மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று இஸ்தான்புல் நகரில் இருந்து இஸ்மிர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சோம நகர் அருகே அந்த பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து உள்ளனர்.
இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். பேருந்தில் மொத்தம் 50 பேர் வரை இருந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.