உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பஸ்கள் மோதல்; 77 பேர் படுகாயம்

தென் ஆப்பிரிக்காவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 77 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் முன்பு வந்தபோது எதிரே வந்த மற்றொரு பஸ் இதன்மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 77 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு