உலக செய்திகள்

2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்; கனடாவும் தூதரக ரீதியில் புறக்கணிப்பு

சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

தினத்தந்தி

ஒட்டாவா,

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 முதல் 20-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் பிஜீங் குளிர்கால ஒலிம்பிக் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், சீனாவின் பிஜீங்கில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை தூதர ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. பிஜீங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் கனட வீரர்\வீராங்கணைகள் பங்கேற்பார்கள். ஆனால், கனடா அரசு சார்பில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் எந்த அதிகாரிகளும் பங்கேற்கமாட்டார்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு