பப்புவா.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.