உலக செய்திகள்

கேரள கன்னியாஸ்திரியின் புனிதர் பட்ட விழாவில் போப் ஆண்டவருக்கு புத்தகம் பரிசளித்த மத்திய மந்திரி

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு வாடிகன் நகரில் நேற்று முன்தினம் நடந்த வண்ணமிகு விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அவருடன் மேலும் 4 பேருக்கும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

தினத்தந்தி

வாடிகன் சிட்டி,

இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் போப் ஆண்டவரை முரளிதரன் சந்தித்தார்.

அப்போது அவருக்கு, மகாத்மா காந்தியின் பார்வையில் பகவத் கீதை என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். மேலும் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கேரள கோவில் திருவிழாக்களை பிரதிபலிக்கும் வகையில், அலங்கரிக்கப்பட்ட யானை சிலை ஒன்றையும் போப் ஆண்டவரிடம் முரளிதரன் வழங்கினார். இவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ், அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து