ஜகர்த்தா,
இந்தோனேசிய நாட்டில் 2018ம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. வருகிற ஆகஸ்டு 18ந்தேதி தொடங்கும் இந்த போட்டி செப்டம்பர் 2ந்தேதி வரை ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நீண்ட வரிசையில் கின்னஸ் உலக சாதனைக்காக தெருக்களில் நடனம் ஆடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதன்படி ஆயிரக்கணக்கானோர் வரிசையாக ஜகர்த்தா நகரின் தெருக்களில் கூடி நின்று போகோ போகோ நடனம் ஆடினர்.
இந்த நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவும் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.
இதனை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள 500 சிறைச்சாலைகளில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் கைதிகளும் இந்த நடனத்தினை ஆடினர். இந்த நிகழ்ச்சியை ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒருங்கிணைப்பு குழுவானது முன்னின்று நடத்தியது.