உலக செய்திகள்

சிரியா மீதான ரசாயன தாக்குதல் ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா-ரஷ்யா வார்த்தை போர்

சிரியா மீதான ரசாயன தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்காவும் ரஷ்யாவும் ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் வார்த்தை போரில் ஈடுபட்டன. #SyriaWar

ஜெனிவா

கடந்த சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் சிரியாவின் டவுமா நகரில் டஜன் கணக்கான மக்கள் ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சிரியா மற்றும் ரஷ்யா ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றன. ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அடுத்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

அமெரிக்கா இது தொடர்பாக ராணூவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பான விசாரணை ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் நடைபெற்றது.

சிரியா மீதான ரசாயன தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்காவும் ரஷ்யாவும் ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் வார்த்தை போரில் ஈடுப்பட்டன. சிரியா டூமா மீது ரசாயன தாக்குதல் தொடுக்கப்பட்டது என்பது உண்மை அல்ல என்றும், அதற்கு அமெரிக்கா காட்டும் ராணுவ எதிர்வினைக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யாவின் பிரதிநிதி வசிலி நபியென்சியா கூறினார்.

அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி சிரியா ராணுவத்துக்கு உதவும் ரஷ்யாவின் கரங்களில் சிரியா குழந்தைகளின் ரத்தம் படிந்துள்ளது என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்