உலக செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ள வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த்த தடுப்பூசியே முக்கிய கருவி என நிபுணர்கள் வலியுறுத்துகின்றன. இதனால், உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் முழு கவனம் செலுத்தி, தடுப்பூசி போட்டு வருகின்றன.

இந்த நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 69- நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சிலியில் கடந்த 24 மணி நேரத்தில் 996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்