உலக செய்திகள்

சீனாவில் 3 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் 3 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பீஜிங்,

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து வந்தது. குறிப்பாக கொரோனா கண்டறிப்பட்ட உகான் நகரில் கடந்த 3 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 45 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் 3 நாட்களுக்கு பிறகு உள்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வைரசுக்கு புதிதாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் உகான் நகரத்தை சேர்ந்தவர்கள். அதேவேளையில் உகான் நகரில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,261 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 54 ஆக உயர்ந்துள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு