உலக செய்திகள்

சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து - பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஜியாங்சி, 

சீனாவின் ஜியாங்சி மாகாணம், யுஷூயி மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் வளாகம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். எனினும் தீப்பற்றிய பகுதிகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது . தற்போது இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு