உலக செய்திகள்

சீனா: 70 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை குறைந்தது

சீனாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை தற்போது குறைந்துள்ளது.

பிஜீங்,

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தியதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக சீனா விளங்குகிறது. அதிக மக்கள் தொகையால் பல்வேறு இன்னல்களை சந்தித்த அந்நாடு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பது உள்பட பல கடுமையான விதிமுறைகளை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு முதன்முறையாக அங்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் ஆண்டுக்கு 25 லட்சமாக இருந்த குழந்தை பிறப்பு இப்போது ஆண்டுக்கு 7 லட்சத்து 90 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதனால் சீனாவின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், சமூக அமைப்பில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு