உலக செய்திகள்

ரஷியாவில் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச சீனா வேண்டுகோள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திற்கு இடையில் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச சீனா கோரிக்கை வைத்து உள்ளது.

மாஸ்கோ

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சென்று உள்ளார். இந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் ன் ராஜ்நாத் சிங்கை சந்திக்க கோரிக்கை வைத்து உள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர்கள் இருவரும் எஸ்சிஓ பாதுகாப்பு மந்திரி கூட்டத்தில் கலது கொள்ள மாஸ்கோவில் உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை எஸ்சிஓ குழுவின் ஒரு பகுதியாகும்.

சீனாவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் 2 நாடுகளுக்கிடையில் அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்தியா கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் தற்போதைய நிலைமை சீனாவின் "நடவடிக்கைகளின் நேரடி விளைவாக" இருப்பதாக கூறியது.

வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "கடந்த நான்கு மாதங்களாக நாம் காணும் நிலைமை, சீனத் தரப்பு ஒருதலைப்பட்சமாக மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற நடவடிக்கைகளின் நேரடி விளைவாகும் என்பது தெளிவாகிறது என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்