உலக செய்திகள்

கழுத்தில் கத்தி வைக்கும்பொழுது அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த முடியாது; சீனா

கழுத்தில் கத்தி வைப்பது போன்று சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கும் நிலையில் அந்நாட்டுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது என சீனா இன்று தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தக போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகள் இரண்டும் ஒன்றின் மீது மற்றொன்று என இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நேற்று முன்தினம் அமெரிக்கா 200 பில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் வரி விதித்தது.

இந்த நிலையில், சீன வர்த்தக துணை மந்திரி வாங் சோவன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, அமெரிக்கா இதுபோன்ற வர்த்தக தடைகளில் ஈடுபட்டு வருகிறது. சிலரது கழுத்தில் அது கத்தியை வைக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பேச்சுவார்த்தைகளில் எப்படி ஈடுபட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்