உலக செய்திகள்

சீன பிரதமருடன் மகிந்த ராஜபக்சே தொலைபேசியில் பேச்சு- சீனா உதவ உறுதி அளித்ததாக தகவல்

கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி அளித்து வருகிறது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நிலையில், இலங்கைக்கான சீன தூதர் ஜி ஜெங்காங், இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீசை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, இலங்கைக்கு சீனா உதவி அளிப்பது தொடர்பாக விவாதித்தார். இந்தநிலையில், நேற்று சீன பிரதமர் லி கேகியாங்கை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுகுறித்து மகிந்த ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சீன பிரதமருடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இலங்கை மக்களின் முக்கிய தேவைகளுக்கு உதவி அளிக்க உறுதி அளித்ததற்காகவும், நீண்டகால நட்புறவுக்காகவும் இலங்கையின் நன்றியை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது