உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 1765 ஆக உயர்ந்துள்ளது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்