உலக செய்திகள்

பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தை உறுதியாக பின்பற்றுவோம்: சீனா திட்டவட்டம்

பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

பெர்லின்,

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். அந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே டிரம்ப் இருந்து வந்தார். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திலிருது அமெரிக்கா வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பாரிஸ் பருவ நிலை மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்று சீனா தெரிவித்துள்ளது. சீன பிரதமர் லி கெகியாங் இந்த தகவலை தெரிவித்தார். பருவ நிலை மநாட்டின் தீர்மானத்தின் படி 2030 என்ற இலக்கை படிப்படியாக உறுதியுடன் பின்பற்றி சீனா அமல்படுத்தும் என்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்