உலக செய்திகள்

சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவுக்கு பதிலடி தரப்படும்; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் முடிவை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தினால் அதற்கு பதிலடி தரப்படும் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெய்ஜிங்,

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் பொருட்களுக்கான வரியை டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியது. இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்தனர். இதனால் இந்திய பங்கு சந்தையிலும் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், சீனாவில்இருந்துஅமெரிக்காவுக்குஏற்றுமதிசெய்யப்படும்சுமார் 5 ஆயிரம்கோடிடாலர்கள்மதிப்பிலான 800 பொருட்களுக்குஅமெரிக்கஅரசுசமீபத்தில் கூடுதல்வரிவிதித்திருந்தது. இதற்கு பதிலடி தரப்படும் என சீன அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதுபற்றிய தகவலை புளூம்பெர்க் நியூஸ் வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி கெங் ஷுவாங் கூறும்பொழுது, சீனாவின் சட்ட அடிப்படையிலான உரிமைகள் மற்றும் பலன்களை காக்க நிச்சயம் பதிலடி தரப்படும் என கூறினார். அவர் பதிலடியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

சீனாவின் தொழில்நுட்ப கொள்கை விவகாரம் ஒன்றினையடுத்து இரு நாடுகளும் முறையே மற்ற நாட்டின் மீது கோடிக்கணக்கான டாலர் மதிப்பில் 25 சதவீதம் அளவிற்கு வரி விதிப்புகளை கடந்த காலங்களில் அமல்படுத்தி இருந்தது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை