உலக செய்திகள்

இந்தியா மாலத்தீவுக்கு படைகளை அனுப்பினால் சீனா நடவடிக்கை எடுக்கும் - குளோபல் டைம்ஸ்

இந்தியா மாலத்தீவுக்கு படைகளை அனுப்பினால் சீனா நடவடிக்கை எடுக்கும் என குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

தினத்தந்தி

பெய்ஜிங்,

சீன அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில், ஒருதலைப்பட்சமான ராணுவ தலையீட்டுக்கு சீனாவின் எதிர்ப்பை இந்தியா குறைத்து மதிப்பிடக்கூடாது, என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம், அவசரநிலை பிரகடனம் என மோசமான நிலையில் அந்நாட்டு அப்துல்லா யாமீன், நிலை தொடர்பாக விளக்கம் அளிக்க சிறப்பு தூதரை நெருங்கிய நாடுகளான சீனா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிட்டார். இதில் இந்தியா இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவைதான் முதலில் நாடினோம் என மாலத்தீவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்தியாவின் மீது சீனா பாய்ந்தது. டோக்லாமில் இந்திய-சீன ராணுவம் இடையிலான மோதல், பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு ஐ.நா.வில் பொருளாதார தடை விதிப்பு ஆகிய சம்பவங்களால் இருநாடுகள் இடையே எரிச்சலூட்டும் மோதல் போக்கு நிலவியதை குறிப்பிட்ட சீனா, மாலத்தீவு மற்றொரு மோதல் தளமாக வேண்டாம் என குறிப்பிட்டது,

மாலத்தீவு அரசியல் சூழ்நிலை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் உள்ளோம், என கூறியது.

இந்நிலையில் இந்தியா மாலத்தீவுக்கு படைகளை அனுப்பினால் சீனா நடவடிக்கை எடுக்கும் என குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

சீன அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில், ஒருதலைப்பட்சமான ராணுவ தலையீட்டுக்கு சீனாவின் எதிர்ப்பை இந்தியா குறைத்து மதிப்பிடக்கூடாது, என குறிப்பிடப்பட்டு உள்ளது. நெருக்கடியான நிலை நீடிக்கும் மாலத்தீவுக்கு இந்தியா ஒருதலைப்பட்சமாக ராணுவத்தை அனுப்ப முடிவை எடுத்தால் சீனா பதிலடியை கொடுக்கும் என சீன அரசு பத்திரிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சீன பத்திரிக்கையில் இதுபோன்ற கொக்கரிப்புக்கள் வெளியாவது தொடர்ச்சியான ஒரு சம்பவமாகும். டோக்லாம் விவகாரத்திலும் இதுபோன்றுதான் மிரட்டும் விதமாக செய்திகளை முடிவு வரையில் வெளியிட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் அனுமதி இல்லாமல் ராணுவ தலையீடு என்பதற்கு எந்தஒரு நியாயமான காரணமும் கிடையாது. மாலத்தீவு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடாது, இவ்விவகாரத்தில் புதுடெல்லி விதிகளை மீறினால் சீனா சேம்பேறித்தனாமாய் அமர்ந்து இருக்கும் என பொருள் கிடையாது. இந்தியா மாலத்தீவுக்கு ராணுவத்தை அனுப்ப நடவடிக்கையை எடுத்தால், சீனா அதனை தடுக்க நடவடிக்கையை எடுக்கும், என குறிப்பிடப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்