உலக செய்திகள்

சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது - விஞ்ஞானிகள் தகவல்

சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

பெய்ஜிங்,

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கான முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் 10 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் சீனாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தநாட்டின் சினொவாக் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை தயாரித்து அதனை சோதனை செய்து வருகிறது.

இந்தநிலையில் சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ இதழான லான்சாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையில் விஞ்ஞானி சூபெங்காய் கூறும்போது, சினொவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை 2 டோஸ் கொடுத்த பிறகு நோயாளிகளுக்கு 4 வாரத்துக்குள் எதிர்ப்பு சக்தி உருவானது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை