உலக செய்திகள்

புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.

பீஜிங்,

உலக நாடுகள் கொரோனா வைரசுடன் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த வைரஸ் உலகுக்கு பரவுவதற்கு காரணமான சீனாவோ தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் செயற்கை கோள்களை விண்ணுக்கு கொண்டு செல்வதற்காக சீனா நடுத்தர வகை ராக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளது. லாங்க் மார்ச் 8 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ராக்கெட் 4.5 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த நிலையில் சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்று ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய லாங்க் மார்ச் 8 ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது.

இதன் மூலம் புதிய ராக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதோடு, 5 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...