பீஜிங்,
சீனாவில் கடந்த ஆண்டு 2013-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருபவர் லி கெகியாங். இவரது 2-வது ஐந்தாண்டு பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
இந்த நிலையில் தனது பதவிக்காலம் முடிந்ததும் தான் ஓய்வு பெற உள்ளதாக பிரதமர் லி கெகியாங் அறிவித்துள்ளார். அதிபர் ஜின்பிங்குக்கு பிறகு அதிகாரம் மிக்க தலைவராக அறியப்படும் 66 வயதான லி கெகியாங், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், சீன பிரதமராக எனக்கு இது கடைசி ஆண்டு என கூறினார்.
அந்த நாட்டின் நடைமுறையின் படி ஆளும் கட்சி மற்றும் அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் 2 ஐந்தாண்டு பதவி காலத்துக்கு பின்னர் ஒய்வு பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி பிரதமர் லி கெகியாங் தான் ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார். ஆனால் அதிபர் ஜின்பிங் தனது 10 ஆண்டு கால பதவியை முடித்த பிறகும், தொடர்ந்து அதிபராக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.