உலக செய்திகள்

இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து

இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெய்ஜிங்,

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார போட்டி நிலவி வந்தது. இந்த மோதல் தீவிரமடைந்த நிலையில், அதிபர் சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக நீக்கினார். உடனடியாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால், தற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது. இலங்கை பிரதமர் பொறுப்பில் நீடிப்பதாக ரனில் விக்ரமசிங்கே கூறி வருகிறார். ரனிலுக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரும் அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில், ராஜபக்சே பெரும்பான்மையை காட்டும் வரை, ரனில் பிரதமராக நீடிப்பார் என்று சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இலங்கை பாராளுமன்றம் நவம்பர் 16 ஆம் தேதி வரை தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்பு,ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டு தலைவர் ஜி ஜிங்பிங் தான். ஏற்கனவே, சீனாவுடன் ராஜபக்சே நெருங்கிய நட்புறவை காட்டுபவர் என்று சர்வதேச அரங்கில் கூறப்படும் நிலையில், ராஜபக்சேவுக்கு சீன அதிபர் வாழ்த்து கூறியதாக வெளியான தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த சமயத்தில், பல பில்லியன் டாலர் முதலீட்டில் சீனா, இலங்கையில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது நினைவு கூறத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்